வாக்களிக்க அஜித் வராதமைக்கு கூறப்படும் 3 காரணங்கள்…!


வாக்களிக்க அஜித் வராதமைக்கு கூறப்படும் 3 காரணங்கள்…!

நேற்று காலை அமைதியாக தொடங்கிய நடிகர் சங்கத் தேர்தல் பின்னர் விஷால் மீது தாக்குதல் என கூறப்பட்டதால் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் சில நிமிடங்கள் தேர்தல் நிறுத்தப்படவே இரு அணியினரும் அமைதி காத்தனர். பின்னர் ஒருவழியாக தேர்தல் முடிந்து விஷால் அணியின் வெற்றி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோன்ற ஒரு சந்தோஷமான பரபரப்பை அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் அடைந்தனர். காரணம் அவர்களது அபிமான நடிகர்கள் வாக்களிக்க வந்திருந்தனர். ஆனால் அஜித் ரசிகர்கள் மட்டும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.

பெரும்பாலும் தன் பட விழாக்களிலும் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதவர் அஜித். ஆனால் சமீபத்தில் மறைந்த மனோரமாவின் இறுதியஞ்சலியில் கலந்து கொண்டார். மேலும் பொதுத் தேர்தலில் தவறாது வாக்களித்து வரும் அஜித் இதற்கும் வருவார் என காத்திருந்தனர். ஆனால் கடைசி வரை அஜித் வராதமைக்கு தற்போது மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது. அவை…

  1. சனிக்கிழமை இரவு விடிய விடிய வேதாளம் படத்தின் டப்பிங் பணியில் அஜித் இருந்தாராம். அதனால் காலையில் ஓய்வு எடுத்து மாலையில் வரவிருந்தாராம்.
  2. ஆனால் மதியம் நடந்த தாக்குதல் சலசலப்பினால் அவர் வர விரும்பவில்லையாம்.
  3. மேலும் தனக்கு ஒரு சிக்கல் வந்த நேரத்தில் நடிகர் சங்கம் உதவ முன்வரவில்லை என்கிற அதிருப்தியும் காரணம் எனக் கூறப்படுகிறது.

அஜித் சார்… இதெல்லாம் உண்மைதானா?