சூப்பர்ஸ்டாருக்கே ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்!


சூப்பர்ஸ்டாருக்கே ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் வரும்போது ஒவ்வொரு முறையும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். திரையரங்குகள் மட்டுமல்ல திரையுலகமே திருவிழா காணும். அனைத்து தரப்பு மக்களும் அவருடைய படங்களை பார்ப்பதால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

இந்நிலையில் அண்மையில் வெளியான லிங்கா’ அதிக விலைக்கு விற்கப்பட்டது. இதனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் பெரும் பிரச்சினைகளை இன்றுவரை விநியோகஸ்தர்கள் சந்தித்து வருகின்றனர்.

லிங்காவின் மொத்த நஷ்டம் ரூ. 33 கோடி என்ற நிலையில், ரூ. 12 கோடியை திருப்பூர் சுப்ரமணியத்திடம் கொடுத்து பகிர்ந்தளிக்க கொடுத்ததாக ரஜினி தரப்பில்  கூறப்பட்டது. ஆனால் சிங்காரவேலன் மற்றும் ஒரு சில விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதாகவும் மற்ற சிலரின் கைகளுக்கு எட்டவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்திக்கவிருக்கின்றனர். இம்முறை ரஜினி நேரிடையாக தலையிட்டு பண பகிர்ந்தளிக்கும் இந்தப் பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவிருக்கின்றனர்.

இல்லையென்றால் ரஜினி படங்களுக்கு ரெட் கார்டு போடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளனர். ரெட் கார்டு போடப்பட்டால் ரஜினி நடித்த படத்தை யாரும் வாங்கவும் மாட்டார்கள், திரையிடவும் மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்ட்ரா தகவல் : கடந்த 22 வருடங்களுக்கு முன் வந்த ‘உழைப்பாளி’ படத்திற்கும் ரெட் கார்டு போட முன்வந்தனர் விநியோகஸ்தர்கள். ஆனால், “ரெட் கார்டு போட்டாலும் உங்களுடைய தயவு இல்லாமல் தியேட்டரில் படத்தை நேரடியாக வெளியிடுவேன்” என்றார் ரஜினி. அதன்பின்னர் விநியோகஸ்தர்கள் இறங்கிவந்து ரெட் கார்ட்டை விலக்கி சமாதானம் ஆனார்கள்.

இம்முறை என்ன நடக்கப் போகிறது என்ற க்ளைமாக்ஸ் பரபரப்பு ரஜினி ரசிகர்களுக்கு தொற்றிக் கொண்டுள்ளதாம்.