‘உண்மையான ரசிகர்கள் நடிகையின் உடலை பார்ப்பதில்லை…’ நஸ்ரியாவுக்கு ரீமா சப்போர்ட்?


‘உண்மையான ரசிகர்கள் நடிகையின் உடலை பார்ப்பதில்லை…’ நஸ்ரியாவுக்கு ரீமா சப்போர்ட்?

‘நேரம்’ படத்தின் மூலம் மலையாளம் மற்றும் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நஸ்ரியா. தொடர்ந்து தமிழில் ‘ராஜா ராணி’, ‘நையாண்டி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ போன்ற படங்களில் நடித்து தமிழக ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

ரசிகர்கள் கனவு நிறைவு பெறுவதற்குள் மலையாள நடிகரான பஹத் பாசிலுடன் காதல் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தார். இருந்தபோதிலும் அவர் மீண்டும் நடிக்க வரமாட்டாரா? என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் நஸ்ரியாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மிகவும் குண்டு பெண்ணாக காணப்படுகிறார் நஸ்ரியா. இதனால் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இவரைப்போலவே சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு நடிக்க வந்த நடிகை ரீமா கல்லிங்கல்லையும் கிண்டலடித்தார்கள். இதுகுறித்து ரீமா சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“திருமணம் செய்தால் எந்த பெண்ணாக இருந்தாலும் உடலில் மாற்றம் ஏற்படும். அது இயற்கை. நாம் ஒன்றும் செய்துவிட முடியாது. சில நடிகைகள் திருமணத்திற்குப் பின்பும் நடித்து வெற்றி வாகை சூடியுள்ளனர். உண்மையான ரசிகர்கள் உடலை பார்ப்பதில்லை. எங்களது நடிப்பை மட்டுமே ரசிப்பார்கள்” என பதிலடி கொடுத்துள்ளார் ரீமா.