அடுத்த டார்கெட் அஜித்-தனுஷ்தான்… தேசிய விருது நாயகியின் பெரிய ஆசை..!


அடுத்த டார்கெட் அஜித்-தனுஷ்தான்… தேசிய விருது நாயகியின் பெரிய ஆசை..!

பாக்ஸிங் உலகில் இருந்து வந்து தன் முதல் அறிமுக சினிமாவிலே தேசிய விருதை தட்டிச் சென்றவர் ரித்திகா சிங்.

அதுவும் முதல் படமே தமிழ் மற்றும் இந்தியில் தயாரானதால், இந்தியா முழுவதும் பிரபலமானார்.

தற்போது தேசிய விருது இயக்குனரான காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார்.

கோபுரம் பிலிம்ஸ் சார்பாக அன்பு செழியன் தயாரிக்க கே என்பவர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ரித்திகா, தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளதாவது…

“எனக்கு தமிழில் அஜித் மற்றும் தனுஷை மிகவும் பிடிக்கும். அவர்களுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். எனவே அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.