விஜய் சேதுபதியின் ஜோடியாக ரித்திகா சிங்..!


விஜய் சேதுபதியின் ஜோடியாக  ரித்திகா சிங்..!

மாதவனின் ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்து, ரசிக நெஞ்சங்களை தன் பாக்ஸிங் பன்ச்சால் வீழ்த்தியவர் ரித்திகா சிங். பலரது பாராட்டுக்களைப் பெற்ற இவர் தற்போது புதிய படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

இதன் முதற்கட்டமாக தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

‘ஆண்டவன் கட்டளை’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

கிருமி படத்தின் இயக்குனர் அனுசரண் படத்தொகுப்பாளராக பணியாற்றவிருக்கும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பாக அன்பு செழியன் தயாரிக்கிறார்.