தேசிய விருது விழா: ரித்திகா சிங் பங்கேற்றார். இம்முறையும் இளையராஜா பங்கேற்கவில்லை…!


தேசிய விருது விழா: ரித்திகா சிங் பங்கேற்றார். இம்முறையும் இளையராஜா பங்கேற்கவில்லை…!

அண்மையில், 63வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதற்கான விழா நேற்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடந்தது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தேர்வு பெற்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ தமிழில் சிறந்த படமாக தேர்வு பெற்றது. மேலும் இதில் பணிபுரிந்த சமுத்திரகனி மற்றும் மறைந்த எடிட்டர் கிஷோர் ஆகியோரும் தேர்வு பெற்று இருந்தனர்.

சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை ‘இறுதிச்சுற்று’ ரித்திகா சிங் நேரில் பெற்றுக் கொண்டார்.

‘தாரை தப்பட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜா தேர்வு பெற்றார்.

ஆனால் சில காரணங்களால் இளையராஜா இந்த விருதை பெறவில்லை.

கடந்த 2010ஆம் ஆண்டு பழசிராஜா என்ற படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கு விருது அறிவிக்கப்பட்டபோதும் இளையராஜா அதை பெற பெற டெல்லிக்கு செல்லவில்லை.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை என தனித்தனியாகப் பிரித்து இந்த விருது வழங்கப்படுவதால், இளையராஜா மறுத்துவிடுவதாக கூறப்படுகிறது.