அஜித்துடன் இணையும் தேசிய விருது நாயகி ரித்திகாசிங்..!


அஜித்துடன் இணையும் தேசிய விருது நாயகி ரித்திகாசிங்..!

வீரம், வேதாளம் ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக டி.தியாகராஜன் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் அஜித்துடன் இணையும் பிரபல நாயகி யார்? என்று பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நாயகி பட்டியலில் அனுஷ்கா, தமன்னா, எமி ஜாக்சன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்துவரும் நிலையில், இப்படத்தில் இரண்டு நாயகிகள் அஜித்துடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த கேரக்டரில் நடிக்க ரித்திகா சிங்கின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாம். தன் முதல் படமான இறுதிச்சுற்று படத்திற்காக தேசிய விருதை வென்றவர் இவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.