விஜய்சேதுபதி படங்களை லிஸ்ட் எடுக்கும் ரித்திகா சிங்..!


விஜய்சேதுபதி படங்களை லிஸ்ட் எடுக்கும் ரித்திகா சிங்..!

மாதவன் தயாரித்து நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தில் அறிமுகமானவர் ரித்திகாசிங். சுதா இப்படத்தை இயக்கியிருந்தார். இதில் ரித்திகாவின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனையடுத்து ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் இயக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் ரித்திகா என்பதை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.

இதுகுறித்து ரித்திகாசிங் கூறியதாவது…

“மும்பையில் இருந்து என் தந்தையுடன் வந்து டைரக்டர் மணிகண்டனை சந்தித்தேன். அவர் கூறிய கதை அருமையாக இருந்தது. எனவே ஒப்புக் கொண்டேன்.

அப்போது படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியை பற்றி நிறைய கேள்விபட்டேன். இதுவரை அவரை சந்திக்கவில்லை. ஆனால் சந்திக்கும் முன் அவரது படங்களை பார்த்துவிட இருக்கிறேன். அவருடைய படங்களை லிஸ்ட் எடுத்து வைத்துள்ளேன்” என்றார்.