ஆர் ஜே பாலாஜியுடன் ராஜேஷ்… சந்தானம் இல்லாமல் மணக்குமா?


ஆர் ஜே பாலாஜியுடன் ராஜேஷ்… சந்தானம் இல்லாமல் மணக்குமா?

கதையும் சதையுமாக ஸாரி… ஸாரி… சரக்கும் காமெடியும் ஆக சந்தானமும் இயக்குனர் ராஜேஷ் அவர்களும் ஒன்றாக இருந்தனர். ராஜேஷ் இயக்கிய அனைத்து படங்களிலும் சந்தானம் மெயின் கேரக்டரில் நடித்து வந்தார்.

இந்நிலையில் முதன்முறையாக சந்தானம் இல்லாமல் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் ராஜேஷ். இவர் இயக்கவிருக்கும் ’கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இதில் ஆர் ஜே பாலாஜி முதன்முறையாக இயக்குனருடன் கைகோர்க்கிறார்.

மேலும் இப்படத்தில் நிக்கி கல்ராணி, அவிகா கோர் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய இசை ஜி.வி.பிரகாஷ். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி சிவா படத்தை தயாரிக்கிறார்.

ஹ்ம்… சந்தானம் இல்லாத இப்படம் மணக்குமா என்று பார்க்கலாம்…?