‘ஹீரோ ரஜினி; காமெடி வடிவேலு; வில்லன் ஆர்கே சுரேஷ்..’ அட… சூப்பர்ல.!


‘ஹீரோ ரஜினி; காமெடி வடிவேலு; வில்லன் ஆர்கே சுரேஷ்..’ அட… சூப்பர்ல.!

ஒரு சில படங்களில் உள்ள நாயகனின் பெயர்கள் வித்தியாசமானதாகவும், மறக்க முடியாதவையாகவும் அமைந்து விடுகின்றன.

மூன்றுமுகம் படத்தில் உள்ள அலெக்ஸ் பாண்டியன் என்ற கேரக்டரை இன்றளவும் எவராலும் மறக்க முடியாது.

பாண்டியன் என்ற பெயரில் படங்கள் வந்தாலும் இந்த அலெக்ஸ்க்கு கிடைத்த அப்ளாஸ் மற்ற பெயருக்கு கிடைக்கவில்லை.

இந்த அலெக்ஸை தொடர்ந்து வடிவேலுக்கு ‘என்னம்மா கண்ணு’ என்ற படத்தில் ‘டெலக்ஸ் பாண்டியன்’ என்ற கேரக்டர் அமைந்தது. இதுவும் பாப்புலர் ஆனது.

தற்போது மருது வில்லனுக்கு ஆர் கே சுரேஷுக்கு ‘ரோலக்ஸ் பாண்டியன்’ என்ற பெயர் மிரட்டலாக அமைந்துள்ளது. இதுவும் தற்போது பாப்புலராகி வருகிறது.

பாண்டியன் என்ற பெயருக்கு முன்னால் இடம்பெற்ற அலெக்ஸ், டெலக்ஸ், ரோலக்ஸ் ஆகிய மூன்றும் ஹீரோ, காமெடியன், வில்லன் என வரிசையாக அமைந்திருப்பது ஒரு வகையில் ஆச்சரியம்தான்.