வேதாளம்-தெறி டீசரை கலாய்க்கும் ரோபா சங்கர்..?


வேதாளம்-தெறி டீசரை கலாய்க்கும் ரோபா சங்கர்..?

விஷ்ணு விஷால் நடிப்பில் எழில் இயக்கியுள்ள படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. இதில் நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

இதில் காக்சி சட்டை அணிந்து நாயகனுடன் காதல் புரிகிறார் நிக்கி. இவர்களுடன் சூரி, ரோபா சங்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்குநர் எழில் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர். ஜி.சத்யா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை சற்றுமுன் இணையத்தில் அனிருத் வெளியிட்டார்.

இந்த ட்ரைலரில் ரோபோ சங்கர், சின்னக் குழந்தைகளைப் போல் ‘அம்மா இங்கே வா… வா’ என ரைம்ஸ் சொல்லிக் கொண்டு இருப்பார். அப்போது சூரி, அவரிடம் அண்ணே… ஏன் ரைம்ஸ் சொல்றீங்க? என்று கேட்பார்.

அதற்கு ரோபா சங்கர், இப்போதெல்லாம் ரைம்ஸ் சொன்னதான் பட ட்ரைலர் ஹிட்டாகும் என்று கூறுகிறார்.

வேதாளம் டீசரில், கண்ணா மூச்சி ரேரே என்று அஜித் பாடியிருப்பார். அதுபோல் தெறி டீசரில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்று விஜய் பாடுவார். இரண்டும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இரண்டு டீசரையும் இவர் கலாய்த்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.