சூர்யாவுடன் இணைந்த ரோபோ சங்கர்… அப்போ சந்தானம்?


சூர்யாவுடன் இணைந்த ரோபோ சங்கர்… அப்போ சந்தானம்?

பெரிய திரையில் மார்கெட் இழந்தவர்கள் சின்னத்திரைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அதே வேளையில் சின்னத்திரையில் மார்கெட் உள்ளவர்கள் பெரிய திரையை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றனர். இது அவர்களின் திறமைக்கு கிடைத்த பரிசே.

சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் ரோபோ சங்கரும் பெரிய திரையில் கலக்கி கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான ‘மாரி’ படத்தில் தன் காமெடியால் தனித்து நின்றார். தொடர்ந்து பல வாய்ப்புகளை ஒப்புக் கொண்டு திரையுலகில் சாதித்து வருகிறார்.

இந்நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் ‘எஸ் 3’ (சிங்கம் 3) படத்தில் நடித்து வருகிறார் ரோபோ சங்கர். இவர்களுடன் சூரி, சாம்ஸ், பின்னணி பாடகர் க்ரிஷ் ஆகியோரும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கின்றனர்.

சிங்கம், சிங்கம் 2 ஆகிய பாகங்களில் விவேக் நடித்திருந்தார். அவர் மூன்றாம் பாகத்திலும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டாம் பாகத்தில் நடித்த சந்தானம் இதில் இருப்பாரா? எனத் தெரியவில்லை.

தற்போது ‘எஸ் 3’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.