விஜய் ஆண்டனி, ஜிவி. பிரகாஷ் வரிசையில் தேவிஸ்ரீ பிரசாத்!


விஜய் ஆண்டனி, ஜிவி. பிரகாஷ் வரிசையில் தேவிஸ்ரீ பிரசாத்!

ஹீரோக்கள் தயாரிப்பாளர்களாக ஆவதும், இயக்குனர்கள் ஹீரோக்கள் ஆவதும் தற்போது அதிகளவில் நடைபெற்று வருகிறது. இவர்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர்களும் ஹீரோவாக மாறி வருகின்றனர்.

நான் படம் மூலம் விஜய் ஆண்டனி, டார்லிங் படம் மூலம் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஹீரோ வேஷம் கட்டினார்கள். தற்போது இவர்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.

இவர் நாயகனாக நடிக்க, பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. ஒளிப்பதிவு ரத்னவேலு. தேவிஸ்ரீ பிரசாத்தே இசை அமைப்பார் எனவும் கூறப்படுகிறது.

தற்போது மற்ற கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதால் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.