விஜய்-அஜித்தை நெருங்கும் ‘ரெமோ’ சிவகார்த்திகேயன்..!


விஜய்-அஜித்தை நெருங்கும் ‘ரெமோ’ சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கும் முக்கியமானவர்களில் அஜித்-விஜய்யும் தவிர்க்க முடியாதவர்கள்.

இவர்கள் சினிமாவில் நடிக்க வந்து 25 ஆண்டுகளை கடந்து விட்டாலும், தற்போதுதான் இவர்களின் சம்பளம் ரூ. 25 கோடிகளை எட்டியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்க வந்து 6 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை.

ஆனால் அதற்குள் சிவகார்த்திகேயன் ரூ. 20 கோடிக்கும் அதிகமான சம்பளத்தை பெறபோவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தற்போது நடித்து வரும் ரெமோ படத்தை தொடர்ந்து அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, பஹத் பாசில் உள்ளிட்ட பிரபல கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

அனிருத் இசையமைக்க, ரெமோ தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவே இப்படத்தையும் தயாரிக்கிறார்.

இதன்பின்னர் ஏஎம் ரத்னம் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக ரூ. 25 கோடி வரை பேசப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கலக்குங்க ‘சிவா’ஜி