அஜித், விஜய், சூர்யாவை நெருங்கும் தனுஷ்…!


அஜித், விஜய், சூர்யாவை நெருங்கும் தனுஷ்…!

தற்போது தயாராகும் படங்கள் யாவும் குறைந்தது 5 கோடி முதல் 10 கோடி வரை நெருங்குகிறது.

இதில் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் அவர்களின் சம்பளம் சேர்த்து 30 கோடி வரை கூட நெருங்கும்

நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரது படங்கள் ரூ. 50 கோடி பட்ஜெட்டுக்கு மேல் தயாராகி வருகிறது.

இவர்களின் சமீபத்திய படமான தெறி, 24 ஆகிய படங்கள் ரூ. 70 கோடி வரை பட்ஜெட் என கூறப்பட்டது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் பட்ஜெட்டும் ரூ. 50 கோடி வரை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை வுண்டர்பார் நிறுவனம் சார்பில் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்கிறாராம் நாயகன் தனுஷ்.

இந்தியிலும் தனுஷ்க்கு மார்கெட் உள்ளதால், இதை ஹிந்தியிலும் டப் செய்யவுள்ளனர். இப்படத்தை பென் மீடியா வாங்கி வெளியிடுகிறது.