தனுஷ் தம்பியின் ‘ரம்’… ஓபன் செய்த விவேக், அனிருத்..!


தனுஷ் தம்பியின் ‘ரம்’… ஓபன் செய்த விவேக், அனிருத்..!

சாய் பரத் இயக்கும் ‘ரம்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஹிரிஷிகேஷ். இவர் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர்.

இதில் ஹிரிஷிகேஷுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ், சஞ்சிதா ஷெட்டி நடிக்க இவர்களுடன் விவேக், நரேன் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இன்று பூஜையுடன் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் விவேக், அனிருத், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பாக விஜய ராகவேந்திரா படத்தை தயாரிக்கிறார்.