ரஜினியும் இல்லை, அஜித்தும் இல்லை… லாரன்சுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!


ரஜினியும் இல்லை, அஜித்தும் இல்லை… லாரன்சுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!

பி.வாசு கன்னடத்தில் இயக்கிய சிவலிங்கா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. சிவராஜ்குமார், சக்திவேல் வாசு, வேதிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு ஹரிகிருஷ்ணா இசையமைத்திருந்தார்.

எனவே, இதன் தமிழ் ரீமேக்கில் ரஜினியை நடிக்க வைக்க வாசு விரும்பினார். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

அதன்பின்னர் அஜித்தை ரஜினி சிபாரிசு செய்ததாக கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக இயக்குனர் யாரையும் சந்திக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

தற்போது இதுகுறித்து லைக்கா நிறுவனத்திடம் பேசியிருப்பதாகவும் இதில் நடிக்க ராகவா லாரன்ஸ் முடிவாகி இருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.