ரஜினி, கமலை அடுத்து சூர்யாவுடன் ஆர்வி உதயகுமார்!


ரஜினி, கமலை அடுத்து சூர்யாவுடன் ஆர்வி உதயகுமார்!

விஜயகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ‘சின்னக்கவுண்டர்’. ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சுகன்யா, கவுண்டமணி, செந்தில், மனோரமா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனை தொடர்ந்து ரஜினிக்கு ஒரு ‘எஜமான்’, கமலுக்கு ஒரு ‘சிங்காரவேலன்’, கார்த்திக்கு ஒரு ‘பொன்னுமணி’ போன்ற வெள்ளிவிழா படங்களை கொடுத்தார் ஆர்.வி. உதயகுமார். அதன்பின்னர் ‘சின்ன ராமசாமி பெரிய ராமசாமி’ என்ற காமெடி படத்தையும் இயக்கி நடித்தார். அந்த படம் இதுவரை வெளியாகவில்லை.

இதற்கிடையில் அதிமுக கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார். கடந்த 10 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த இவர் தற்போது காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் ‘ஹைக்கூ’ படத்தில் பள்ளி தலைமை ஆசிரியராகவும் பாபி சிம்ஹா நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தில் வில்லனாகவும் நடிக்கிறாராம்.