தனுஷின் தந்தையாக நடிக்கும் விஜய்யின் தந்தை!


தனுஷின் தந்தையாக நடிக்கும் விஜய்யின் தந்தை!

புரட்சி இயக்குனர் என்றழைக்கப்படுவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவரது மகன் விஜய்யின் ரசிகர்கள் இவரை அன்பாக எஸ்.ஏ.சி. என அழைப்பதுண்டு. நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு பல வெள்ளி விழா படங்களை தந்தவர் இவர்.

எழுபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் இந்த வருடம் வெளியான ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தில் 70 வயது இளைஞராக நடித்திருந்தார். அதன்பின்னர் நடிப்பைத் தொடர நிறைய வாய்ப்புகள் நடிக்காமல் இருந்தார். ஆனால் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இதில் முதன்முறையாக தனுஷ் இருவேடங்களில் நடிக்கவிருக்கிறார். அதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக அஜித்தின் மச்சினி ஷாம்லி நடிக்கிறார் என்பது நாம் அறிந்ததே.

தற்போது இதில் தனுஷின் தந்தையாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கவிருக்கிறாராம். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.