ஹலோ நான் பாஸ்கர் பேசுறேன்… விஜய்சேதுபதிதான் அதற்கு காரணம்..!


ஹலோ நான் பாஸ்கர் பேசுறேன்… விஜய்சேதுபதிதான் அதற்கு காரணம்..!

வைபவ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் ஹலோ நான் பேய் பேசுறேன். சுந்தர் சி தயாரித்துள்ள இப்படத்தை பாஸ்கர் இயக்கியிருக்கிறார்.

இதில் ஓவியா, விடிவி. கணேஷ், கருணாகரன், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இச்சந்திப்பில் இயக்குனர் பாஸ்கர் பேசியதாவது…

“நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன். மார்க்கெட்டிங் துறையில் முன்பு இருந்தேன்.

குறும்படங்கள் இயக்கியது மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது. எனவே, சுந்தர்.சி. என் மனமார்ந்த நன்றி. ஆனால் நன்றி என்பது சின்ன வார்த்தை. அவருக்கு நான் பல ஜென்மங்கள் கடமைப்பட்டு இருக்கிறேன்.

பேய் படங்கள் என்றால் பங்களா என்ற பழைய பாணி இல்லாமல் இதில் போனிலிருந்து பேய்வரும்.

இதில் ஐந்து பாடல்கள் உள்ளது. ‘மஜா’ பாடலை விஜய் சேதுபதி பாடிக்கொடுத்தார். அவர் பாடியதால் இன்று எங்கும் அப்பாடலை கேட்க முடிகிறது. அவருக்கும் இப்போது நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

Related