விஜய்சேதுபதி, பாபிசிம்ஹாவை மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா!


விஜய்சேதுபதி, பாபிசிம்ஹாவை மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா!

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படம் ‘இறைவி’. இப்படத்தில் இவரின் ஆஸ்தான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். விஜய்சேதுபதி, பாபி சிம்ஹாவைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவும் இதில் நடித்து வருகிறார்.

இவர்களுடன் அஞ்சலி, கருணாகரன், கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். சி.வி. குமார் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுவரை ரகசியமாக இருந்து வந்தது. தற்போது அவரின் கேரக்டர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறாராம். இவர் முதன்முறையாக வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ‘வேட்டையாடு விளையாடு’ புகழ் கமாலினி முகர்ஜி நடித்து வருகிறார்.