கமல்ஹாசனின் சப்பாணி கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா..!


கமல்ஹாசனின் சப்பாணி கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா..!

அஜித், விஜய் உள்ளிட்டோருக்கு திருப்புமுனை படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா.

தற்போது முழுநேர நடிகராக மாறி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, ராதாரவி, கருணாகரன், காளி வெங்கட், அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவ்ரியா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் இறைவி.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட எஸ் ஜே சூர்யா பேசியதாவது…

“ஒரு நடிகனாக வரவேண்டும் என நினைத்தேன். ஆனால் இயக்குனராக, தயாரிப்பாளராக வரவேண்டிய சூழ்நிலை.

என்னை ஒரு நடிகனாக ரசிகர்கள் கூட ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் சினிமாவில் இன்னமும் என்னை ஒரு இயக்குனராகவே பார்க்கிறார்கள்.

16 வயதினிலே படத்தில் கமலை எல்லாரும் சப்பாணி என்றுதான் அழைப்பார்கள். அவர் கோபால கிருஷ்ணன் என்ற பேரை சொன்னாலும் அப்படிதான் கூப்பிடுவார்கள்.

அதுபோல் ஒரு நடிகனாக அடையாளப்படுத்திக் கொண்டாலும் என்னை சப்பாணி கேரக்டர் போல இயக்குனராகத்தான் பார்கிறார்கள்.

ஆனால் இறைவி படத்தில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் எனக்கு ஒரு கேரக்டர் கொடுத்துள்ளார்” என்று பேசினார் எஸ் ஜே சூர்யா.