‘கபாலி’, ‘எஸ் 3’… வேற வேற ரூட்… ஆனா ப்ராப்ளம் ஒண்ணுதான்..!


‘கபாலி’, ‘எஸ் 3’… வேற வேற ரூட்… ஆனா ப்ராப்ளம் ஒண்ணுதான்..!

‘சிங்கம் 3’ என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ‘எஸ் 3’ என்று கூறி தன் படத்தை போலேவே படு ஸ்பீடாக சூட்டிங்கை தொடங்கி விட்டார் ஹரி. இதில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி, ரோபோ சங்கர், சாம்ஸ், பாடகர் கிரிஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராவதால் தெலுங்கு சினிமாவுக்கும் பொருந்துகிற மாதிரி காவல் அதிகாரிகளின் உடைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

தற்போது விசாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எனவே, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் படப்பிடிப்புக் காட்சிகளைப் படம் பிடித்து தங்கள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ‘எஸ் 3’ படக்குழுவினர் தயவுசெய்து படம் எடுக்காதீர்கள். அதனை இணையங்களில் பதிவேற்றாதீர்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் ‘கபாலி’ படக்குழு மலேசியா சென்றபோது இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.