ரஜினி பிறந்தநாளை குறிவைக்கும் சபாஷ் நாயுடு..!


ரஜினி பிறந்தநாளை குறிவைக்கும் சபாஷ் நாயுடு..!

சாணக்யன் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன்-ராஜீவ்குமார் கூட்டணியில் உருவாகவுள்ள படம் சபாஷ் நாயுடு.

இதனை லைகா நிறுவனத்துடன் இணைந்து கமல் தயாரிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் இதே பெயரிலும், சபாஷ் குண்டு என்ற பெயரில் இந்தியில் உருவாகவுள்ளது.

இதில் கமலுடன் பிரேமானந்தம், ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இதன் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிறார் கமல். இதில் முதல் காட்சியே சண்டை காட்சியுடன் தொடங்குகிறதாம்.

இதற்காக கமல் உள்ளிட்ட படக்குழுவினர் சில நாட்கள் ஒத்திகையும் பார்த்துள்ளனர்.

இதில் உளவுத்துறை அதிகாரியாக கமல் நடிக்க, அவரின் உதவியாளராக பிரம்மானந்தம் நடிக்கிறார். இந்தியில் மட்டும் கமலுடன் செளரப் சுக்லா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போதே இளையராஜா இப்படத்தின் இசை பணிகளை தொடங்கிவிட்டாராம்.

இப்படத்தை டிசம்பர் மாத இரண்டாம் வாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

டிசம்பர் மாத 2ஆம் வாரத்தில்தான் ரஜினி பிறந்தார் என்பதும், ரஜினியின் 2.0 படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.