விஜய்க்கு போட்டியாக சச்சின்-ஏஆர் ரஹ்மானின் டீசர்..!


விஜய்க்கு போட்டியாக சச்சின்-ஏஆர் ரஹ்மானின் டீசர்..!

நாளை மறுநாள் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி வெளியாகிறது.

இந்நிலையில் ‘Sachin: A Billion Dreams’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் டீசரும் அன்றைய தினத்தில் வெளியாகிறது.

இப்படம் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு படமாகும். இதில் சச்சினே நடித்துள்ளார். ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நேற்று ட்விட்ட்ரில் வெளியிட்டார் சச்சின். இதனைக் கண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், இப்படத்தை பார்க்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

பர்ஸ்ட் லுக் வைரல் ஆனதை தொடர்ந்து. இப்படம் டீசரை நாளை மறுநாள் வெளியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாட்டின் பெருமையை உலகளவில் கொண்டு சேர்த்த இரண்டு சாதனையாளர்கள் ஒரே படத்தில் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.