அஜித், சிவகார்த்திகேயனை இயக்க ஆசைப்படும் வாலிப ராஜா..!


அஜித், சிவகார்த்திகேயனை இயக்க ஆசைப்படும் வாலிப ராஜா..!

சந்தானம், சேது, விசாகா சிங் உள்ளிட்டோர் நடித்து அண்மையில் வெளியான படம் வாலிப ராஜா.

இப்படத்தின் இயக்குனர் சாய் கோகுல் ராம்நாத் அவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“எல்லாருக்கும் குடும்ப டாக்டர்கள் இருப்பார்கள். ஆனால் எங்கள் குடும்பமே டாக்டர் குடும்பம்தான்.

ஆனால் என்னுடைய கலை ஆர்வத்தால் விஷ்வல் கம்யூனிகேஷன் படித்தேன். அதன்பின்னர் டைரக்டக்ஷன் ட்ரெயினிங் எடுத்தேன்.

நான் இயக்கிய வாலிப ராஜா படம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. குடும்பத்தோடு வந்து பார்க்கிறார்கள். இப்போது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறேன். அதற்காக இரண்டு கதைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளேன்.

இது சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான கதை. அவர் நடித்தால் நன்றாக இருக்கும். அஜித்தை இயக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.