டாக்டராக மாறப்போகும் ‘மலர் டீச்சர்’ சாய் பல்லவி..!


டாக்டராக மாறப்போகும் ‘மலர் டீச்சர்’ சாய் பல்லவி..!

பிரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை வசியம் செய்தவர் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி.

இவர் விரைவில் மணிரத்னம் படத்தின் நாயகியாக மாறவிருக்கிறார். இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் கார்த்தி, பைலட் கேரக்டரில் நடிக்க, சாய் பல்லவி டாக்டராக நடிக்கவிருக்கிறாராம்.

தன்னுடைய நிஜ வாழ்விலும் சாய் பல்லவி ஒரு டாக்டர் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

இப்படத்தின் மற்ற கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.