சமந்தா, த்ரிஷாவை ரொம்ப பிடிக்கும் – கௌதம்மேனன்


சமந்தா, த்ரிஷாவை ரொம்ப பிடிக்கும் – கௌதம்மேனன்

‘கூடல்–2015’ என்ற பெயரில் திருவண்ணாமலையில் கல்லூரி கலைவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கலந்து கொண்டார். விழாவின்போது தேர்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

அதன்பின்னர் கல்லூரி மாணவர்கள் சரமாரியாக கேள்விகளை தொடுத்தனர். அதற்கு கௌதம்மேனன் பதிலளித்தார். அவை பின்வருமாறு…

மெக்கானிக்கல் என்ஜினீயரிங், திரைப்பட இயக்குனர் இதில் உங்களுக்கு பிடித்தது?

கல்லூரி படிப்பு இல்லைன்னா திரைப்பட துறையில் நான் இருப்பது கடினம்.

விஜய்யை வைத்து படம் இயக்குவது எப்போது?

விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் சொல்லும் கதை அவரை திருப்தி படுத்ததினால் உடனே இணைந்து பணிபுரிவோம்.

மின்னலே, விண்ணை தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகம் இயக்க ஆசை?

என்னை அறிந்தால் பார்ட் 2

உங்கள் பட கதாநாயகிகளில் உங்களுக்கு பிடித்த நாயகி யார்?

தமிழ் பேச தெரிந்த நடிகையாக இருந்தால் தமிழில் சரியான உச்சரிப்பை பெற முடியும். அந்த வகையில் சமந்தாவிற்கு 3 மொழிகள் தெரியும்.  சமந்தாவை ரொம்ப பிடிக்கும். அதே போல் த்ரிஷாவையும் ரொம்ப பிடிக்கும்.

ஹாலிவுட் படம் இயக்குவீர்களா? ஹீரோ யார்?

அஜித்தை வைத்து ஹாலிவுட் படம் இயக்குவேன்.

 நட்பு–காதல் இவற்றில் எது சிறந்தது?

என்றுமே நட்புதான் சிறந்தது.

இவ்வாறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.