தயாராகிறது விஜய்யின் குடும்பப் பாடல்!


தயாராகிறது விஜய்யின் குடும்பப் பாடல்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் “தாறுமாறு” (வருகிற நவ. 26ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது) இப்படத்தை மிகப்பிரம்மாண்டமான முறையில் கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.

இதுநாள் வரை சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி வந்த படக்குழுவினர் தற்போது கோவாவில் முகாமிட்டுள்ளனர். இப்படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல்காட்சிகளை கோவாவில் படம் பிடித்து வருகிறார்கள்.

ஒன்று விஜய், எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட கனவுப் பாடல். மற்றொரு பாடல் விஜய், சமந்தா சம்பந்தப்பட்ட குடும்பப் பாடல்.

கதைப்படி விஜய், சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்குப் பிறந்த மகளாக நடிக்கிறார் நடிகை மீனாவின் மகள் நைனிகா. இவர்கள் மூவரும் சம்பந்தப்பட்ட பாடலைத்தான் தற்போது படமாக்கி வருகிறார் அட்லி.

ஆக விஜய்க்கு தயாராகி வருகிறது ஒரு குடும்பப் பாடல்!