சூர்யா படத்தை பெரும் தொகைக்கு வாங்கிய சமந்தா!


சூர்யா படத்தை பெரும் தொகைக்கு வாங்கிய சமந்தா!

ஒரு படம் வெற்றி பெற்றால் மட்டுமே அப்படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் அடுத்த படத்தில் இணைவார்கள். ஆனால் ‘அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு பிறகு சூர்யா, சமந்தா ‘24’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இதற்கு காரணம் படத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான்.

இவர்களுடன் நித்யாமேனன், சத்யன், சரண்யா பொன்வண்ணன், அஜய், கிரிஷ் கர்னாட், மோகன் ராமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க விக்ரம்குமார் இயக்கி வருகிறார். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தை போல ஆந்திராவிலும் சூர்யாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. மேலும் இயக்குனர் விக்ரம்குமார் இயக்கிய ‘மனம்’ என்ற தெலுங்கு படம் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை பெற்றுத் தந்தது. அவரது இயக்கத்தில் அடுத்து வெளிவரும் படம் ‘24’ என்பதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே இப்படத்தின் தெலுங்கு உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம் சமந்தா. அதாவது ரூ. 20 கோடிக்கு வாங்கி வெளியிட இருக்கிறாராம். இதுவே தற்போது ஆந்திரா திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.