பல்லாவரம் மக்களுக்காக சமந்தாவின் தாராள மனசு!


பல்லாவரம் மக்களுக்காக சமந்தாவின் தாராள மனசு!

தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் கண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

தற்போது நடிகை சமந்தாவும் நிவாரணப் பணிகளில் ஈடுபட இருக்கிறார். இதற்காக சென்னையிலுள்ள பல்லாவரம் பகுதி மக்களுக்காக ரூ. 30 லட்சம் ஒதுக்கி இருக்கிறாராம் சமந்தா. இத்தொகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணப் பொருட்களை வழங்கவிருக்கிறார்.

சமந்தா, பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையைச் சேர்ந்த பல்லாவரம் பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.