ஒரே படத்தில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் ப்ரணித்தா..!


ஒரே படத்தில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் ப்ரணித்தா..!

தமிழில் அஜித் தவிர மற்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர் சமந்தா. இவரின் நடிப்பில் உருவாகியுள்ள விஜய்யின் தெறி மற்றும் சூர்யாவின் 24 ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகிறது.

இந்நிலையில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து வரும் பிரம்மோற்சவம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் வேடத்தில் முதலில் ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவிருந்தாராம்.

இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதரபாத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ப்ரணித்தா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.

பிவிபி நிறுவனம் தயாரித்து வரும் இதன் பாடல்களை மார்ச் 24ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.