‘விஜய் 59’ குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா!


‘விஜய் 59’ குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா!

‘புலி’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்திற்கு பெயரிட ரஜினிகாந்த நடித்த ‘மூன்று முகம்’, விஜயகாந்த் நடித்த ‘வெற்றி’ மற்றும் சரத்குமார் நடித்து பாதியில் நின்றுபோன ‘காக்கி’ ஆகிய படங்களின் தலைப்பு ஆலோசனையில் வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த தலைப்பும் உறுதியாகவில்லை என கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், மீனா மகள் நைனிகா, கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.

தற்போது இதன் படப்பிடிப்பு சென்னை ECR-ல் உள்ள ஒரு பிரம்மாண்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய், சமந்தாவின் டூயட் பாடல் ஒன்றை படமாக்கவுள்ளனர். இந்நிலையில் இப்பாடல் குறித்து சமந்தா தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது…

‘அட்லி இயக்கும் ‘விஜய் 59′ படத்தில் மாஸான பாடலில் நான் நடனமாடவிருக்கிறேன். அதில் வரும் அருமையான நடன அசைவுகளுக்காக என்னைத் தயார்படுத்தி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.