சிவகார்த்திக்கு ‘நோ’ சொன்ன சமந்தா சிம்புக்கு ‘ஓகே’வாம்!


சிவகார்த்திக்கு ‘நோ’ சொன்ன சமந்தா சிம்புக்கு ‘ஓகே’வாம்!

‘அஞ்சான்’, ‘கத்தி’ படங்களை தொடர்ந்து சமந்தா தற்போது நிறைய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். எனவே, இரண்டு வருடங்களுக்கு இவரின் கால்ஷீட் நிரம்பி வழிகிறதாம். தற்போது விக்ரமுடன் ’10 எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சூர்யாவுடன் ’24’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படியாக பிஸியாக இருந்தபோதிலும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு வரும்போது அதனையும் கெட்டியாக பிடித்து கொள்கிறார். வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஒரு படத்திலும், அட்லீ இயக்கும் விஜய் படத்திலும் சமந்தா நடிக்கவிருக்கிறார்.

இதற்கிடையில் சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திலிருந்து பல்லவி சுபாஷ் விலகியதையடுத்து அப்படத்தில் சமந்தா நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. சமந்தா இதற்கு முன்னரே கௌதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத் தாண்டிவருவாயா’ படத்தின் தெலுங்குப் பதிப்பிலும், ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்திலும் நடித்துள்ளார்.

வேறு எந்த முன்னணி நாயகியும் ஒத்து வராததால் சிம்புவும் சமந்தாவுக்கு சம்மதம் சொல்லிவிட்டாராம். எனவே, இது பற்றிய அதிகார்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கேட்டதற்கு ‘தன்னிடம் தேதிகள் இல்லை’ என்று சமந்தா கூறியது தங்கள் நினைவிருக்கலாம்.