விஜய்-சூர்யா கை கொடுத்தும் சமந்தாவின் அதிரடி முடிவு…!


விஜய்-சூர்யா கை கொடுத்தும் சமந்தாவின் அதிரடி முடிவு…!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து வருபவர் சமந்தா.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஜய்யின் ‘தெறி’ மற்றும் சூர்யாவின் ’24’ ஆகிய இரு படங்களும் பாக்ஸ் ஆபிஸிஸ் பட்டைய கிளப்பி வருகிறது.

இதனால் இவரை தங்கள் படங்களில் புக் செய்ய பலரும் காத்திருக்கும் நிலையில் திடீரென ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

” என்னுடைய சம்மர் கால படங்களை முடித்து கொடுத்துவிட்டேன். கடந்த 8 மாதங்கள் ஓய்வில்லாமல் கடுமையாக உழைத்தேன். இனி நிம்மதியாக தூங்குவேன்.

ஆனால் சிறந்த மகளாகவோ, ஒரு சிறந்த தோழியாகவோ இருக்கமுடியவில்லை. எனவே, இனி சற்று இடைவெளி விட இருக்கிறேன். சில காலங்களுக்கு புதிய படங்களை ஒப்புக் கொள்ள மாட்டேன்.

என்னுடன் துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.