‘ராவா’ படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக ஐஸ்வர்யா!


‘ராவா’ படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக ஐஸ்வர்யா!

‘உன்னை சரணடைந்தேன்’, ‘நெறஞ்ச மனசு’, ‘நாடோடிகள்’, ‘போராளி’, ‘நிமிர்ந்து நில்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சமுத்திரக்கனி. இந்த வெற்றிப் படங்களை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் பிஸியான நடிகர் இவர்.

‘ஈசன்’, ‘சாட்டை’, ‘நீர்ப்பறவை’, ‘வேலையில்லா பட்டதாரி’ போன்ற படங்களில் இவரது கேரக்டர்கள் பேசும்படியாக அமைந்தது. நிறைய படங்களில் நடித்து வந்தாலும் நாயகியுடன் டூயட் பாடும் வாய்ப்புகள் இதுவரை அமையவில்லை.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் ஹீரோவாக களம் காணவிருக்கிறார். ‘ராவா’ என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார் இவர்.  மற்றொரு ஹீரோவாக அறிமுக நாயகன் கோபி நடிக்கிறார். சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ புகழ் ஐஸ்வர்யா தத்தா நடிக்கவிருக்கிறாரம்.

தற்போது ‘மாஸ்’, ‘ரஜினி முருகன்’, ‘காவல்’, ‘விசாரணை’ போன்ற படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி என்பது குறிப்பிடத்தக்கது.