விஜய்யை தொடர்ந்து சமுத்திரக்கனி… மோகன்லாலுடன் ‘ஒப்பம்’!


விஜய்யை தொடர்ந்து சமுத்திரக்கனி… மோகன்லாலுடன் ‘ஒப்பம்’!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தற்போது புலி முருகன் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து பிரியதர்ஷன் இயக்கும் ‘ஒப்பம்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறாராம் மோகன்லால். இவர் 18 வருடங்களுக்கு முன்பே குரு’ மற்றும் ‘யோதா’ ஆகிய படங்களில் பார்வையற்றவராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கொலைப்பழி மோகன்லால் மீது விழ, அதை எதிர்கொண்டு எப்படி தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்கிறார் என்பதே ஒப்பம் படத்தின் கதையாம். இதில் மோகன்லால் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார் சமுத்திரக்கனி.

கடந்த ஆண்டு வெளியான ஜில்லா படத்தில் மோகன்லாலுடன் விஜய் இணைந்து நடித்தார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது சமுத்திரக்கனி இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.