‘சூர்யா சொன்னதால் நாகேஷ் ஆக நடித்தேன்’ – சந்தானம்


‘சூர்யா சொன்னதால் நாகேஷ் ஆக நடித்தேன்’  – சந்தானம்

‘இனிமே இப்படித்தான்’ படத்தை தொடர்ந்து புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க கதை கேட்டு வருகிறார் சந்தானம். விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது. இந்நிலையில் தன் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சியை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில்…

“நான் மரிய நிவாஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது என் வகுப்பாசிரியர் சூர்யா மிஸ் என்னை பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சொன்னார். அந்த நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன், நாகேஷ் சார் நடித்த ‘திருவிளையாடல்’ காட்சி இருந்தது. அதில் நாகேஷ் நடித்த கேரக்டரில் என்னை நடிக்க சொன்னார் வகுப்பாசிரியர்.

என் முதல் மேடையே நிகழ்ச்சியே காமெடி ஜாம்பவான் நாகேஷ் கேரக்டரில் அமைந்தது. அதில் என் நடிப்பை பார்த்த சூர்யா மிஸ் என்னைப் பாராட்டினார். என் திறமையை மிகவும் ஊக்கப்படுத்தினார்” என்று தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் சந்தானம்.