சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’… நாகேஷ் பட ரீமேக்?


சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’… நாகேஷ் பட ரீமேக்?

‘இனிமே இப்படித்தான்’ என ஹீரோவாக கிளம்பிவிட்ட சந்தானம் புதிய படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஜனவரி 1ஆம் தேதி இவர் சேதுவுடன் இணைந்து நடித்துள்ள ‘வாலிப ராஜா’ திரைக்கு வருகிறது.

இதனைத் தொடர்ந்து ‘லொள்ளுசபா’ புகழ் ராம்பாலா இயக்கும் புதிய படத்தில் நடித்துவரும் சந்தானம் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
கெனன்யா பிலிம்ஸ் ஜே.செல்வகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். ஆனந்த் பால்கி இப்படத்தை இயக்கவிருக்கிறார். இவர் ‘ஆயுத எழுத்து’ படத்தின்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு ‘சர்வம் சுந்தரம்’ என பெயரிட்டுள்ளனர். இது கே. பாலசந்தர் இயக்கி நாகேஷ் நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘சர்வம் சுந்தரம்’ படத்தின் ரீமேக்கா என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.