‘இப்போ அஜித்துன்னா அப்போ கவுண்டமணிதான்..’ சந்தானம் பேச்சு..!


‘இப்போ அஜித்துன்னா அப்போ கவுண்டமணிதான்..’ சந்தானம் பேச்சு..!

கவுண்டமணி ஹீரோவாக நடிக்க, சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இந்த படத்தை சண்முகம் தயாரித்துள்ளார்.

இவருடன் நாயகனாக சௌந்தர்ராஜா, ரித்விகா நடித்துள்ளனர். இதில் கேரவன் கிருஷ்ணன் என்ற நாத்திகவாதியாக நடித்து இருக்கிறாராம் கவுண்டர்.

இதன் இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் கலந்துகொள்வார் என்பதை முன்பே தெரிவித்திருந்தோம் அல்லவா.

அதில் சந்தானம் பேசியதாவது… “எல்லா காமெடியர்களும் கவுண்டமணி சாரைதான் பாலோ செய்கிறார்கள். நானும் அவரின் சீன்களை யூடியூபில் அடிக்கடி பார்ப்பேன். இதை சொல்ல எனக்கு தயக்கம் கிடையாது.

காமெடிக்கு அவர் ஒரு டிக்ஸ்ஷனரி போன்றவர். இப்போதும் கூட ஏதாவது கமென்ட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

கவுண்டமணி சார் அந்த கால அஜித்குமார். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் எந்த பொது நிகழ்ச்சிகளுக்கும் வரமாட்டார்.

இந்த படத்தில் அவர்தான் ஹீரோ. அருமையான நடித்திருக்கிறார். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார் சந்தானம்.