அஜித்துக்காக தன் கொள்கையை மாற்றிய சந்தானம்..!


அஜித்துக்காக தன் கொள்கையை மாற்றிய சந்தானம்..!

சில வருடங்களுக்கு முன்பு, ஹீரோக்களுக்கு நிகராக சந்தானத்திற்கும் வரவேற்பு பலமாக இருந்தது. அப்போது காமெடி ரோல்களை மட்டுமே செய்து வந்தாலும் இவருக்காக ஓடிய படங்களும் உண்டு.

ஆனால் இப்போது, நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். இனிமே இப்படித்தான் என்று தடம் மாறாமல் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள தல 57 படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஹீரோ வேஷம் கட்டிய பிறகு காமெடி வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று கொள்கையை சந்தானம் வைத்திருந்தாலும், அஜித்துக்காக அதை தளர்த்தியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இவர் இதற்கு முன்பே, அஜித்துடன் கிரீடம், பில்லா மற்றும் வீரம் ஆகிய படங்களில் நடித்திருந்த்து தங்களுக்கு நினைவிருக்கலாம்.