ஒன்லி ஹீரோ.. காமெடிக்கு “நோ”வா? சந்தானத்தின் டேஞ்சரஸ் மூவ்..??


ஒன்லி ஹீரோ.. காமெடிக்கு “நோ”வா? சந்தானத்தின் டேஞ்சரஸ் மூவ்..??

தமிழ் சினிமாவில் காமெடி செய்து கலக்கியவர் பலர் இருந்தாலும் ஒரு சிலரை நாம் எப்போதும் மறக்க மாட்டோம். அதிலும் கலாய்த்து காமெடி செய்வதில் கவுண்டரை மிஞ்ச ஆள் கிடையாது. கவுண்டரை பாலோ செய்து முன்னுக்கு வருவதில் சந்தானம் தற்போது முன்னிலை வகிக்கிறார்.

ஆனால் இவர் தற்போது தன் காமெடி ரூட்டை மாற்றி ஹீரோயினுடன் டூயட் பாட ஆசைப்படுகிறார். தான் ஹீரோவாக அவதாரம் எடுத்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் ஓரளவு கவனிக்கப்படவே தொடர்ந்து ஹீரோ ரூட்டில் பயணிக்க ஆரம்பித்து விட்டார். படத்தை ஸ்ரீநாத் இயக்கியிருந்தார்.

இவரின் அடுத்த படமான ‘இனிமே இப்படித்தான்’ படத்தையும் நண்பர்கள் முருகன், ஆனந்த் இணைந்து இயக்கியிருந்தனர். இதுவும் ஓகே என பெயரெடுக்க அடுத்த பட வேலைகளில் பரபரப்பாகிவிட்டார்.

இவரின் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. ‘லொள்ளுசபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கும் இப்படத்தில் ஆனந்த் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்திலும் சந்தானத்தின் ஆஸ்தான நாயகி அஸ்னா ஸாவேரி நடிக்கிறார்.

திகில் கலந்த காமெடி படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இனிமே ஹீரோ மட்டும்தானா??

காமடியெல்லாம் கிடையாதா என்றால், ஹீரோவாக பலமா மக்களால் ஏற்றுக்கொள்ளும்வரை தனது ஹீரோ நண்பர்கள் கேட்டால் மட்டும் செய்வது என்ற முடிவாம்.
அதுசரி ஆத்துக்காரி இல்லன்னா அத்தையாவது பாலூத்தணும்ல..