கபாலி, தெறி, வேதாளம் என எதையும் விட்டு வைக்காத சந்தானம்..!


கபாலி, தெறி, வேதாளம் என எதையும் விட்டு வைக்காத சந்தானம்..!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வந்த, சந்தானம் தற்போது தனி ஹீரோவாக மாறி நாயகிகளுடன் டூயட் பாடி வருகிறார்.

ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தில்லுக்கு துட்டு’ படத்தில் ஆக்சன் ஹீரேவாக நடித்து வருகிறார் சந்தானம்.

இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த டீசர் தொடங்கும்போதே இதில் மொட்டை ராஜேந்திரன் தோன்றுகிறார்.

இதில் வேதாளம் டீசரில் இடம்பெற்ற ‘கண்ணாம்பூச்சி ரே ரே, மற்றும் தெறி டீசரில் இடம்பெற்ற டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் ஆகிய ரைம்ஸ்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் ஒரு படி மேலே சென்று ரஜினியின் ‘கபாலி’ வசனமான ‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தையும் பயன்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர சந்தானம் திட்டமிட்டு இருக்கிறார்.