ரஜினி வழியில் தாடியுடன் அலையும் சந்தானம்!


ரஜினி வழியில் தாடியுடன் அலையும் சந்தானம்!

தான் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்தபோதிலும் ரஜினி பெரும்பாலும் தன் தோற்றத்தை குறித்து கவலைப்படுவதில்லை. தன் ரியல் லைப் வேறு… தன் ரீல் லைப் வேறு… என்பதை தெளிவாக புரிந்து நடந்து வருபவர். இவர் சமீபகாலமாக வெண்தாடியுடன் காணப்படுகிறார். இது ‘கபாலி’ படத்திற்கான கெட்டப் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவரைப்போலவே பிரபல நடிகர் ஒருவரும் தாடியுடன் காணப்படுகிறார்.

இந்நிலையில், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ மற்றும் ‘இனிமே இப்படித்தான்’ படங்களை தொடர்ந்து புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சந்தானம். இதுவரை க்ளீன் ஷேவ் செய்த முகத்தில் மட்டுமே நாம் சந்தானத்தை பார்த்து வந்தோம். ஆனால் தற்போது முகத்தில் முழுக்க தாடியுடன் காணப்படுகிறார்.

ஏன்? இதுவரை நன்றாகதானே இருந்தார். எதற்காக இந்த தாடி? என்று நெருங்கிய வட்டாரத்திரடம் விசாரித்தபோது… தற்போது நடிக்கவுள்ள புதிய படத்திற்காக இப்படி அலைகிறாராம். ‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கவுள்ள ஒரு படத்தில் சந்தானம் நடிக்கிறார்.

தாடி இருந்தாலும், தாடி இல்லாமல் ஷேவிங் செய்திருந்தாலும் இந்த படத்தில் காமெடிக்கு குறைவிருக்காதாம். ஆனால் முதன்முறையாக இப்படத்தில் காமெடியுடன் திகில் மற்றும் ஹாரர் கலந்து இருக்குமாம். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளது. படத்தின் கலைஞர்கள் ஒப்பந்தம் ஆனவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படத்தையும் தனது ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார் சந்தானம்.