‘அப்பு’ கமல் உள்ளிட்ட சந்தானத்தின் ‘தசாவதாரம்’!


‘அப்பு’ கமல் உள்ளிட்ட சந்தானத்தின் ‘தசாவதாரம்’!

ஒரு காமெடியனாக தமிழில் அறிமுகமாகி இன்று தனி ஹீரோவாக ஜெயித்து ‘இனிமே இப்படித்தான்’ என தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். நிறைய தமிழ் படங்களிலும் தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்திலும் நடித்துள்ள இவர் ஒரு இந்திப்படத்தில் நடித்திருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா? உண்மைய சொன்னால் நம்பித்தானே ஆகனும்.

பத்து வருடங்களுக்கு முன்பு, ‘சின்னு மன்னு’ என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார் இவர். இதன் படப்பிடிப்பு 90% சதவிகிதம் முடிவடைந்திருந்தது. ஆனால் எதிர்பாராவிதமாக இப்படத்தின் தயாரிப்பாளர் காலமானார். இதனால் படம் அப்படியே நின்றது. அப்படத்தில் தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவராக சந்தானம் நடித்திருந்தார். அதிலும் காமெடி வேடமே ஏற்றிருந்தார்.

மேலும், அப்படத்தில் 10 விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தாராம் சந்தானம்.  கொள்ளையடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்ததால் விதவிதமான கெட்டப்புகளில் தோன்றுவதாக காட்சிகள் அமைக்கபட்டு இருந்தது. இதில் ஹைலைட்டாக  ‘அபூர்வ சகோதர்கள்’ படத்தில் தோன்றிய ‘அப்பு’ கமல் கேரக்டரும் ஒன்றாம்.

சந்தானம் நடித்த ஒரே இந்திப் படம் அது மட்டுமே. அதன் பின்னர் இந்தி பட வாய்ப்புகள் வந்தும் சந்தானம் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.