அஜித்-விஜய்யே பரவாயில்லை… சந்தானம் இப்படி பண்றாரே..?


அஜித்-விஜய்யே பரவாயில்லை… சந்தானம் இப்படி பண்றாரே..?

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பெரும்பாலான படங்களின் டீசர் நள்ளிரவிலேயே வெளியாகிறது.

முக்கியமாக அஜித்தின் வேதாளம் டீசர் 2015 அக்டோபர் 7ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியானது. அதுபோல் விஜய்யின் தெறி டீசர் 2016 பிப்ரவரி 5ஆம் தேதி நள்ளிரவில் வெளியானது.

ஆனால் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு டீசரை நாளை மே 19ஆம் தேதி நள்ளிரவு 1.50 மணிக்கு வெளியிடவிருக்கிறார்களாம்.

12 மணிக்கு டீசரை வெளியிட்டாலாதாவது பார்த்துவிட்டு தூங்கிடலாம்.

ஆனால் பேய் படம் என்பதற்காக சந்தானம் இப்படி பண்றாரே? இதற்கு அஜித் விஜய்யே பரவாயில்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தன் ரசிகர்கள் கண் விழித்து காத்திருக்கக் கூடாது என ரஜினி உத்தரவுபடி கபாலி டீசர் மே 1ஆம் தேதி பகல் 11 மணிக்கு வெளியானது குறிப்பிடத்தக்கது.