ரஜினியுடன் பணியாற்றிய சாந்தாராம், காளிதாசன் ஒரே நாளில் மரணம்…!


ரஜினியுடன் பணியாற்றிய சாந்தாராம், காளிதாசன் ஒரே நாளில் மரணம்…!

ரஜினியுடன் தப்பு தாளங்கள், முரட்டுக்காளை ஆகிய படங்களில் நடித்தவர் சாந்தாராம்.

இதில் முரட்டுக்காளை படத்தில் ஜெய்சங்கரின் அடியாளாக நடித்திருப்பார்.

40 கன்னட படங்களில் நடித்துள்ள இவர், அம்பரீஷ் உள்ளிட்ட நடிகர்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது இவருக்கு 68 வயதாகிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால், சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனிக்காமல் நேற்று மரணம் அடைந்தார்.

இவரைத் தொடர்ந்து, பிரபல கவிஞர் காளிதாசன் (வயது 69) என்பவரும் நேற்று மரணமடைந்தார்.

தேவா இசையமைத்த வைகாசி பொறந்தாச்சு படத்தில் கவிஞராக அறிமுகமானார்.

ரஜினியின் அருணாச்சலம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் பாடல் ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவரும் நேற்று காலமானார்.

இவருக்கு சமீபத்தில் விஷால் ரூ. 25,000 கொடுத்து உதவியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.