செல்வராகவன் கழட்டி விட, தனுஷ் சேர்த்துக் கொண்டார்..!


செல்வராகவன் கழட்டி விட, தனுஷ் சேர்த்துக் கொண்டார்..!

சிம்புவுடன் இணைந்த கான் படம் காலை வாரிவிட்டாலும், தன் அடுத்த பட இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கெளதம் மேனன் தயாரித்து வருகிறார்.

இதில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, இசைக்கு சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

ஆனால், சந்தோஷ் நாராயணனை கழட்டிவிட்டு, தற்போது யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்து, இரண்டு பாடல்களையும் முடித்து விட்டாராம் செல்வா. விரைவில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.

ஆனால் இவரது தம்பி தனுஷோ சந்தோஷ் நாராயணனுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு சந்தோஷ் இசையமைக்கிறார். முக்கிய வேடத்தில் கருணாகரன் நடிக்க. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.