சிம்புவின் ‘ஆபாச பாடல்’ குறித்து சரத்குமார் கருத்து…!


சிம்புவின் ‘ஆபாச பாடல்’ குறித்து சரத்குமார் கருத்து…!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் களை கட்டிய போது இளம் நடிகர்கள் அனைவரும் விஷால் அணிக்கு ஆதரவளித்தனர். ஆனால் சிம்பு மட்டுமே சரத்குமார் அணிக்கு ஆதரவளித்து பதவிக்கும் போட்டியிட்டார். ஆனால் இவர்கள் அணி தோற்றது நாம் அறிந்ததே.

இந்நிலையில் அண்மையில் வெளியான பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு வசமாக சிக்கிக் கொண்டுள்ளார். இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளதாவது… “பிரச்சினைகளை எதிர்கொண்டு சிம்பு மீண்டு வருவார் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் நடிக்கவிருக்கும் புதிய படங்கள் குறித்து சரத்குமார் கூறியதாவது… “இரண்டு புதுப் படங்களில் நடிக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2016 பொங்கல் அன்று அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.