எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சமுத்திரக்கனி-சசிகுமார்!


எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சமுத்திரக்கனி-சசிகுமார்!

சமுத்திரக்கனி, சசிகுமார் இருவரும் நடித்தும் இயக்கியும் தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். சமுத்திரக்கனி நடிக்கும் படத்தை சசிகுமார் இயக்குவதும், சசிகுமார் நடிக்கும் படத்தை சமுத்திரக்கனி இயக்குவதும் என மாறி மாறி தங்கள் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வந்தனர்.

சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 8 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

வசந்தமணி இயக்கும் வெற்றிவேல் படத்திற்காக இணைந்துள்ள இவர்களுடன் மியா ஜார்ஜ், தம்பி ராமையா, ரேணுகா, பிரபு ஆகியோரும் நடிக்கின்றனர். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைக்கிறார். தொடர்ந்து இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.